T20 உலக கோப்பை - ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி

T20 World Cup 2022 Netherlands Cricket Team Zimbabwe national cricket team
By Nandhini Nov 02, 2022 10:20 AM GMT
Report

இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை போட்டியில், ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

கடந்த 27ம் தேதி சிட்னியில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்ததால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

t20-world-cup-2022-netherlands-win-zimbabwe

ஜிம்பாப்வே வீழ்த்திய நெதர்லாந்து

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, இப்போட்டியின் முடிவில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் பின், 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இப்போட்டியில், மேக்ஸ் ஓட்வாட், டாம் கூப்பர் இணை அருமையாக ஆடி ரன்களை குவித்தனர்.

இப்போட்டியின் இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து அபார வெற்றி அடைந்தது.