நாம் வீரர்கள்.... மக்களிடையே நாம் வெறுப்பை வளர்க்கக் கூடாது...- ஷமிக்கு அப்ரிடி அட்வைஸ்..!
நாம் வீரர்கள், மக்களிடையே நாம் வெறுப்பை வளர்க்கக் கூடாது என்று முகமது ஷமிக்கு அப்ரிடி அட்வைஸ் செய்துள்ளார்.
2-வது முறையாக சாம்பியன் பட்டம்
வென்ற இங்கிலாந்து
நேற்று மெல்போர்னில் T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியின் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அக்தர் கருத்து
சமீபத்தில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இது குறித்து கருத்து தெரிவித்தார். அவர் பேசுகையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஆட்டம் உண்மையிலேயே ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் இந்த வாரம் வெளியே வந்துவிடும். அதே சமயம் அடுத்த வாரம் அரை இறுதியில் விளையாடிய பின் இந்தியாவும் தோல்வி அடைந்து நாடு திரும்பி விடும். ஏனெனில் இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது என்று தெரிவித்தார்.
அக்தருக்கு ஷமி பதிலடி
இந்நிலையில், அக்தர் பாகிஸ்தான் தோல்வி குறித்து உடைந்த இதயத்தின் எமோஜியை டுவிட்டரில் பகிர்ந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஷமி, ‘மன்னிக்கவும் சகோதரா.... இதை கர்மா என்பார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த டுவிட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இவரின் டுவிட்டுக்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஷாகித் அப்ரிடி அட்வைஸ்
இந்நிலையில் ஷமியின் இந்த பதில் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசுகையில்,
நாம் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் நாம் இருக்க வேண்டும். அதற்கான பொறுப்பு நமக்கு உள்ளது.
வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படுத்தப்படும்.
பாகிஸ்தான் அணி வீரர்களின் இந்தியாவில் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார்.
Sorry brother
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
It’s call karma ??? https://t.co/DpaIliRYkd