T20 உலகக்கோப்பை போட்டி - அயர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி...!

Cricket T20 World Cup 2022 New Zealand Cricket Team Ireland Cricket Team
By Nandhini Nov 04, 2022 09:46 AM GMT
Report

T20 உலகக்கோப்பை போட்டியில்  அயர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. 

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

t20-world-cup-2022-ireland-new-zealand-cricket

அயர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து -

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப்1-ல் அடிலெய்டில் மைதானத்தில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் பின்னர், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தின இறுதியில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.