ஐசிசி டி20 வெளியிட்ட தரவரிசை பட்டியல் - மீண்டும் டாப்-10க்குள் நுழைந்த கோலி... - குவியும் வாழ்த்துக்கள் - ரசிகர்கள் மகிழ்ச்சி...!
ஐசிசி டி20 வெளியிட்ட தரவரிசை பட்டியலில், டாப்-10க்குள் மீண்டும் விராட் கோலி நுழைந்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
டாப்-10க்குள் மீண்டும் நுழைந்த விராட் கோலி
இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி டாப்-10க்குள் மீண்டும் நுழைந்து உச்சத்தை அடைந்துள்ளார்.
இன்று ஐசிசி புதிய T20 பேட்ஸ்மேன் தர வரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
அந்த தரவரிசைப் பட்டியலில், 15வது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அதே போல் 2-வது இடத்திலிருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதோ ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியல் -
T20I பேட்டிங் தரவரிசை (அக்டோபர் 26 வரை)
1. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 849 புள்ளிகள்
2. டெவோன் கான்வே (நியூசிலாந்து) - 831 புள்ளிகள்
3. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 828 புள்ளிகள்
4. பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 799 புள்ளிகள்
5. ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) - 762 புள்ளிகள்
6. டேவிட் மலான் (இங்கிலாந்து) - 754 புள்ளிகள்
7. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) - 681 புள்ளிகள்
8. பதும் நிஸ்ஸங்க (இலங்கை) - 658 புள்ளிகள்
9. விராட் கோலி (இந்தியா) - 635 புள்ளிகள்
10. முஹம்மது வசீம் (யுஏஇ) - 626 புள்ளிகள்
குவியும் வாழ்த்துக்கள்
சமீப ஆண்டுகளாக சரிவைக் கண்டு வந்த விராட் கோலி, தற்போது 15வது இடத்திலிருந்து 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு வந்த பட்டியல் வெளியானதால் சமூகவலைத்தளங்களில் விராட் கோலியின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து, வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.