Wow... T20 உலகக் கோப்பை - 4 அரை சதங்களை பதிவு செய்த ‘சூப்பர் கிங்’ விராட் கோலி - குவியும் வாழ்த்துக்கள்..

Virat Kohli Cricket T20 World Cup 2022
By Nandhini Nov 10, 2022 10:59 AM GMT
Report

நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை போட்டியில்- 4 அரை சதங்களை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதிவு செய்துள்ளார் 

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதல்

டி20 உலகக்கோப்பையில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டு வருகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உள்ளது.

virat-kohli

விராட் கோலி சாதனை

இந்நிலையில், இன்று நடந்து வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி 4 அரை சதங்களை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

தற்போது சமூகவலைத்தளங்களுக்கு விராட் கோலிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.