Wow... T20 உலக கோப்பை போட்டியில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி...! - ரசிகர்கள் கொண்டாட்டம்...!
விராட் கோலி
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். ஆனால், சமீப கடந்த ஆண்டுகளாக அவர் தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
சர்வதேச கிரிக்கெட் தொடங்கி, உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி, அவரின் போதாத நேரம் என்பது போல ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார்.
தொடர்ந்து விராட் கோலி சொதப்பி வந்ததால், அவரை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பலர் குற்றம் சாடினார்கள். இதனால் அவர் மனதளவில் மிகவும் சோர்வடைந்தார். ஆனாலும் விராட் கோலிக்கு, அவரது ரசிகர்களும், அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வந்தது.
பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியன. இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விராட் கோலி.
T20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய சமீபத்தில், T20 உலக கோப்பை போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.
ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இப்போட்டியில் ஆட்ட நாயகனாக விருதை கைப்பற்றினார் விராட் கோலி.
பட்டியலில் 2ம் இடம் பிடித்த விராட் கோலி
அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் 20 உலக கோப்பை போட்டியில் 1000 ரன்களை எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இதனையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
T20 உலக கோப்பை போட்டியில், 1016 ரன்கள் எடுத்து மஹேலா ஜெயவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
1000 ரன்களை எடுத்து விராட் கோலி 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
965 ரன்கள் எடுத்து கிறிஸ் கெயில் 3ம் இடத்தைப் பிடித்துள்ளார்.