Wow... - மின்னல் வேகத்தில் பறந்து பிடித்த சூப்பர் கேட்ச் - தெறிக்க விட்ட க்ளென் பிலிப்ஸின் வைரல் வீடியோ..!

Viral Video T20 World Cup 2022 Australia Cricket Team
By Nandhini Oct 22, 2022 10:32 AM GMT
Report

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வீரர் கிளென் பிலிப்ஸின் அக்ரோபாட்டிக் கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதல்

இன்று T20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று தொடங்கியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. முதலில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ்க் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, நியூசிலாந்து அணி விக்கெட்டுகள் இழந்தாலும் கான்வே தொடர்ந்து ரன்கள் குவித்தார். அடுத்துவந்த நீசம் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

t20 world cup 2022

சூப்பர் கேட்ச் - வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பறந்து சென்று கேட்ச் பிடித்து, மார்க்கஸ் ஸ்டோய்னிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ். தற்போது இவரின் மாஸான கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள்... வாவ்.. என்ன ஒரு சூப்பரான கேட்ச்... உண்மையில் இவர் 'நியூசிலாந்தின் சூப்பர்மேன்' தான் என்று ரசிகர்கள் கிளென் பிலிப்ஸை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.