"வேதனை தரக்கூடிய இழப்பு இது..." - சூர்யகுமார் யாதவ் உருக்கமான பதிவு
வேதனை தரக்கூடிய இழப்பு இது என்று கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது.
இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
சூர்யகுமார் யாதவ் டுவிட்
இந்நிலையில், இந்தியாவின் தோல்வி குறித்து சூர்யகுமார் யாதவ் தனது டுவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், வேதனை தரக்கூடிய இழப்பு இது. நாங்கள் எங்கு விளையாடினாலும் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனது நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். வலுவாக மீண்டும் வருவோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Hurtful loss.
— Surya Kumar Yadav (@surya_14kumar) November 11, 2022
Forever grateful to our fans who create electrifying atmosphere, no matter where we play. Thankful for the undying support for each other, proud of the hardwork put in by this team &support staff.
Proud to play for my country??
We will reflect &come back stronger! pic.twitter.com/EeuLz45kgl