T20 தர வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்...!

Cricket T20 World Cup 2022 Suryakumar Yadav
By Nandhini Nov 05, 2022 10:32 AM GMT
Report

T20 தர வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மனம் திறந்து பேசியுள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

முதலிடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் -

சமீபத்தில் ஐசிசி, டி20 சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டது. அந்தப் இந்தப் பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் (863 புள்ளிகள்) முதலிடத்திற்கு முன்னேறினார்.

இப்பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானை (842 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி தற்போது சூர்யகுமார் முதலிடத்தை பிடித்துள்ளார்.

t20-world-cup-2022-cricket-suryakumar-yadav

சூர்யகுமார் யாதவ் பேட்டி -

இந்நிலையில், முதலிடத்தைப் பிடித்தது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியதாவது -

இந்திய அணி நிர்வாகம் எனக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. இதுதான் என்னுடைய சிறப்பான ஆட்டத்துக்கு காரணம்.

நான் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்கினாலும் அணி கொடுக்கும் பணியை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வேன்.

டி20 தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இது என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் இப்பயணம் மிகவும் கடினமானது. அந்த இடத்தில் நீடிக்க இன்னும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். இது எனக்கு பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.