என்னவொரு ஆட்டம்... - பாகிஸ்தான் ரசிகரிடம் மாஸ் காட்டிய சுந்தர் பிச்சை... - வைரலாகும் டுவிட்

Cricket Indian Cricket Team T20 World Cup 2022 Sundar Pichai
By Nandhini Oct 25, 2022 02:22 PM GMT
Report

பாகிஸ்தான் ரசிகரிடம் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை மாஸ் காட்டி பேசிய சுந்தர் பிச்சை டுவிட் பதிவு வைரலாகி வருகிறது.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.

ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களையும், விராட் கோலியையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

t20-world-cup-2022-cricket-sundar-pichai-twitter

சுந்தர் பிச்சை டுவிட்

இந்நிலையில், நேற்று இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்களை இன்று மீண்டும் பார்த்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினேன். என்னவொரு போட்டி, என்னவொரு ஆட்டம்," என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், 'நீங்கள் முதல் 3 ஓவர்களையும் கட்டாயம் பார்க்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ''அதையும் பார்த்தேன்'' புவனேஷ்வர் குமாரும், அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.