டி20 உலகக்கோப்பை போட்டி - 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அமோக வெற்றி..! - குவியும் வாழ்த்துக்கள்
இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அமோக வெற்றி பெற்றுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அமோக வெற்றி
T20 உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று சாம்பியன் இலங்கை அணி நெதர்லாந்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இப்போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
இப்போட்டியின் இறுதியில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Sri Lanka beat Netherlands by 16 runs to seal their qualification to the Super 12 stage ?#T20WorldCup | #NEDvSL | ? https://t.co/k4hjQDFFD9 pic.twitter.com/cC69AJ41Vy
— T20 World Cup (@T20WorldCup) October 20, 2022