‘பாகிஸ்தான் இந்த வாரம் என்றால்... அடுத்த வாரம் இந்திய அணி வெளியேறிவிடும்’ - அக்தர் கருத்து... - வெச்சு விளாசும் ரசிகர்கள்
"பாகிஸ்தான் இந்த வாரம் என்றால்... அடுத்த வாரம் இந்திய அணி வெளியேறிவிடும்’ என்று பாகிஸ்தானின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் அக்தர் பேசியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
அடுத்தடுத்து பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது.
அக்தர் கருத்து
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஆட்டம் உண்மையிலேயே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் இந்த வாரம் வெளியே வந்துவிடும்.
அதே சமயம் அடுத்த வாரம் அரை இறுதியில் விளையாடிய பின் இந்தியாவும் தோல்வி அடைந்து நாடு திரும்பி விடும். ஏனெனில் இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது என்றார்.
ரசிகர்கள் கண்டனம்
தற்போது, அக்தரின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் பேச்சுக்கு இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.