இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை... ஏமாற்றம் அளிக்கிறது - ரோஹித் சர்மா உருக்கம்
இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை... ஏமாற்றம் அளிக்கிறது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உருக்கமாக பேசியுள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனையடுத்து, பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரை சதம் கடந்தார். இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

கேப்டன் ரோகித் ஷர்மா உருக்கம்
இந்நிலையில், இத்தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உருக்கமாக பேசியுள்ளார். இன்று நடைபெற்ற இப்போட்டியில் இப்படி ஆனது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கிறது.
இந்த ஸ்கோரை எட்ட பின்வரிசையில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆனால், இன்று பந்துவீச்சில் எங்களுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதெல்லாம் நாக் அவுட் போட்டிகளில் நிலவும் அழுத்தத்தை நாங்கள் எப்படி கையாள்கிறோம் என்பது குறித்தது. அணியில் உள்ள அனைவரும் இதற்கு விளையாடி பழக்கப்பட்டவர்கள் தான் என்று உருக்கமாக ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.