ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா.....? - ரோஹித் சர்மா பேட்டி...!
ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா பேட்டி கொடுத்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா பேட்டி
சூப்பர் 12 சுற்று இன்று தொடங்கியுள்ளது. இதில், இந்தியா தன் முதல் போட்டியை நாளை பாகிஸ்தான் அணியுடன் நேருக்கு நேர் மோத உள்ளது. இப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி மெல்போர்னுக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து ரோஹித் சர்மா பேட்டி கொடுத்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில் -
ஆசியக் கோப்பையில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும்.
தற்போது, நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
பாகிஸ்தான் பயணம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது என்றார்.