T20 உலக கோப்பை போட்டி - கலந்து கொண்ட அணிகள் பெற்ற பரிசு தொகை - வெளியான பட்டியல் இதோ...

Nandhini
in கிரிக்கெட்Report this article
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அணிகள் பெற்ற பரிசு தொகை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.
2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து
நேற்று மெல்போர்னில் T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இப்போட்டியின் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்ற அணிகள் பெற்ற பரிசு தொகை விவரம் வருமாறு:-
இங்கிலாந்து - ரூ.13.84 கோடி
பாகிஸ்தான் - ரூ.7.40 கோடி
இந்தியா - ரூ.4.50 கோடி
நியூசிலாந்து - ரூ.4.19 கோடி
ஆஸ்திரேலியா - ரூ.1.53 கோடி
தென்னாப்பிரிக்கா - ரூ.1.20 கோடி
வங்காள தேசம் - ரூ.1.20 கோடி
இலங்கை - ரூ.1.85 கோடி
ஆப்கானிஸ்தான் - ரூ.56.35 லட்சம்
நெதர்லாந்து - ரூ.1.85 கோடி
ஜிம்பாப்வே - ரூ.88.50 லட்சம்
அயர்லாந்து - ரூ.1.53 கோடி
வெஸ்ட் இண்டீஸ் - ரூ.64.40 லட்சம்
ஸ்காட்லாந்து - ரூ.64.40 லட்சம்
நமீபியா - ரூ.64.40 லட்சம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ரூ.64.40 லட்சம்
Here's the prize money of all the teams in T20 World Cup 2022 (in INR).
— CricTracker (@Cricketracker) November 14, 2022
#T20WorldCup #T20WC2022 #cricketTwitter pic.twitter.com/WkKKGPwChS