ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்...!

Cricket T20 World Cup 2022 Australia Cricket Team
By Nandhini Oct 18, 2022 06:04 AM GMT
Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி த்ரில் வெற்றி

இந்நிலையில், நேற்று இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் நடந்தது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இப்போட்டியின் கடைசியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனையடுத்து, இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

cricket

புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பின்ச், ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தற்போது கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார்.

வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடர் முதல் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.