Sunday, May 11, 2025

T20 உலக கோப்பை - தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி..!

Pakistan national cricket team South Africa National Cricket Team
By Nandhini 3 years ago
Report

T20 உலக கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி அடைந்துள்ளது.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

t20-world-cup-2022-cricket-pakistan-south-africa

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

T20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னி மைதானத்தில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர், ரிஸ்வான் களத்தில் இறங்கினர். இப்போட்டியின் இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது.

தென்னாப்பிரிக்கா 9 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடிக் கொண்டு வந்த போது, ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி பெரிதும் பாதிக்கப்பட்டது.

இருப்பினும் போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி 2 ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

பதற்றமான சூழ்நிலை என்பதால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இதனையடுத்து, இப்போட்டியின் கடைசியில் 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணி எடுத்து தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி அடைந்தது.