T20 உலக கோப்பை - தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதல் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!

T20 World Cup 2022 Pakistan national cricket team South Africa National Cricket Team
By Nandhini Nov 03, 2022 06:25 AM GMT
Report

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோத உள்ளன.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

t20-world-cup-2022-cricket-pakistan-south-africa

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதல்

T20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னி மைதானத்தில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) நேருக்கு நேர் மோதுகின்றன.

தென்னாப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் சிக்கலின்றி அரை இறுதிக்குள் நுழைந்து விடும். ஒரு வேளை தோற்று விட்டால், கடைசி லீக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தால் போதும்.

இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி அதே வேட்கையுடன் பாகிஸ்தானையும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் ஜெயித்தால் அரை இறுதி கதவு திறக்கும். தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.

இதனால், இரு நாட்டு ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வெற்றியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.