பயிற்சியின்போது பாக். வீரர் மசூத்தின் தலையில் பந்து விழுந்து பலத்த அடி...! - மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் ஷாக்...!
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, இன்று நடந்த பயிற்சியின்போது பாக். வீரர் மசூத்தின் தலையில் பந்து விழுந்து பலத்த அடிபட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
மசூத்தின் தலையில் பந்து விழுந்து பலத்த அடி
T20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுடன் நாளை நேருக்கு நேர் மெல்போர்னில் மோதுகிறது. இதனால், இரு நாட்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் வலை பயிற்சியின் போது, முகமது நவாஸ் ஓங்கி அடித்த ஒரு பந்து, அருகில் நின்று கொண்டிருந்த பேட்ஸ்மேன் ஷான் மசூத்தின் தலையை தாக்கியது. அப்போது அவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.
இதனால், வலியால் துடித்த அவர் அப்படியே மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு 'ஸ்கேன்' பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவருக்கு தலைக்குள் அதிர்வு அறிகுறி எதுவும் தென்படவில்லை. இருந்தாலும், அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவது தற்போது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.