T20 உலக கோப்பை - பாக். வீரர் வீசிய பந்து முகத்தில் பட்டு காயமடைந்த பாஸ் டி லீட்..! வைரலாகும் வீடியோ
இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்து முகத்தில் பட்டு நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீட் காயமடைந்தார்.
T20 உலக கோப்பை போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
காயமடைந்த பாஸ் டி லீட்
இன்று நடைபெறும் 2வது போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் மைபர்க் ரன்களிலும் , மேக்ஸ் டி டவுட் ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்து, நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீட் முகத்தில் பட்டு காயமடைந்தார். முகத்திலிருந்து ரத்தம் வெளியேறியதால், பாஸ் டீ லீட் ( ரிட்டையர்ட் ஹர்ட் ) முறையில் வெளியேறினார்.
தற்போது பாஸ் டீ லீட் காயமடைந்த புகைப்படமும், வீடியோக்களும் சமூகவைலத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Pakistan pacer Haris Rauf's nasty bouncer had struck Netherlands batter Bas de Leede on helmet and it ruled him out of the game. #PAKvNED | #HarisRauf | #BasDeLeede pic.twitter.com/TSYNXid2Gm
— Cricket.com (@weRcricket) October 30, 2022
Haris's ball speeding injures de Leede in the previous over.#HarisRauf #BasdeLeede pic.twitter.com/TFqdk2GkpN
— Social Networker (@snetworkeroff) October 30, 2022