பாகிஸ்தான் தோல்வி எதிரொலி... - ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்

T20 World Cup 2022 Pakistan national cricket team Zimbabwe national cricket team
By Nandhini Oct 28, 2022 06:18 PM GMT
Report

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

அடுத்தடுத்து பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது.

t20-world-cup-2022-cricket-pakistan

ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ட்விட்

இது தொடர்பாக ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ஜிம்பாப்வேவுக்கு இது மிகவும் சிறப்பான வெற்றி. வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என்று பாகிஸ்தானை விமர்சித்து பதிவிட்டிருந்தார். பாகிஸ்தான்

பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பதிலடி

இந்நிலையில், ஜிம்பாப்வே அதிபரின் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தன் டுவிட்டர் பக்கத்தில், எங்களிடம் நிஜமான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிஜமான கிரிக்கெட் ஆர்வம் உள்ளது. சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு வாழ்த்துகள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஜிம்பாப்வேவில் கடந்த 2016ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், பிரபல மிஸ்டர் பீன் கதாப்பாத்திரத்தில் நடித்த ரோவன் அத்கின்சான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு வந்தது பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் முகமுது என்ற போலி மிஸ்டர் பீன். இந்த நிகழ்வை குறிப்பிட்டு ஜிம்பாப்வே அதிபர், "நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்" என்று டுவீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.