டி20 உலகக் கோப்பை : நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அமோக வெற்றி...!
இன்று நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அமோக வெற்றி பெற்றுள்ளது.
T20 உலக கோப்பை போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
நெதர்லாந்து வீழ்த்திய பாகிஸ்தான்
இன்று நடைபெறும் 2வது போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் மைபர்க் ரன்களிலும் , மேக்ஸ் டி டவுட் ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்து, நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீட் முகத்தில் பட்டு காயமடைந்தார். முகத்திலிருந்து ரத்தம் வெளியேறியதால், பாஸ் டீ லீட் ( ரிட்டையர்ட் ஹர்ட் ) முறையில் வெளியேறினார்.
இப்போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியின் இறுதியில் பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடித்துள்ளது.
Finally Pakistan won the match in 14th over against Netherlands. #PAKvsNED pic.twitter.com/UJOAwT76Jb
— Malik Ali Raza (@MalikAliiRaza) October 30, 2022