T20 உலக கோப்பை போட்டியில் புதிய மைல் கல்லை தொட்டு மாபெரும் சாதனை படைத்த விராட்கோலி...!

Nandhini
in கிரிக்கெட்Report this article
T20 உலக கோப்பை போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் பட்டியலில், முதலிடம் பிடித்து விராட் கோலி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்தியா - வங்காளதேசம் நேருக்கு நேர் மோதல்
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது. இந்தியா வெற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளதால், இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் குவித்துள்ளது.
சாதனை படைத்த விராட் கோலி
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இப்போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 64 எடுத்துள்ளார்.இது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோலியின் 3வது அரைசதமாகும்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 1017* ரன்களை கடந்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
Best shot today ??❤️ Virat Kohli ?#ViratKohli? #INDvsBAN pic.twitter.com/VIYXgFWzPp
— Tannu✨ (@yeah_baby___) November 2, 2022
Virat Kohli in ??
— Ayesha Rootfied (@JoeRoot66Fan) November 2, 2022
Inns: 14
Runs: 671* @ 83.87
HS: 90*
Most 50s in ?? (8*)
He is now the leading run scorer in #T20WorldCup history with 1065 runs @ 88.75 after scoring his 3rd 50, 64* V ?? today
He scored 220 runs @ 220 so far in #T20WC2022
Sheer domination of #ViratKohli? ? pic.twitter.com/A2XGHrAnlA