உலக கோப்பை போட்டியில் அந்த 2 பேர் ஏன் இடம் பெறவில்லை...? - இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்
உலக கோப்பை போட்டியில் அவங்க 2 பேர் ஏன் இடம் பெறவில்லை என்று இந்திய அணி தேர்வை குறித்து முன்னாள் வீரர் விளாசியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி வீரர்கள்
ரோகித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல்,
ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெற்றிருக்கின்றனர்.
முன்னாள் வீரர் சந்து போர்டே அதிருப்தி
இந்திய அணியில் முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்படாததை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்து போர்டே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில் -
இந்திய அணியில் ஏற்கெனவே இருக்கும் வீரர்கள் தான் இடம்பெற்றிருக்கிறார்கள். ஷமியின் புறக்கணிப்பு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நல்ல வேகத்தில் ஸ்விங் செய்யக்கூடிய ஷமியை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் புறக்கணித்தது மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது.
அவர் ஆஸ்திரேலியாவில் கண்டிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
சஞ்சு சாம்சனையும் கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுத்திருக்க வேண்டும். அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவரும் ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி அணிக்கு பெரும் பலனை அளித்திருப்பார் என்றார்.