பரபரப்பான கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் களத்தில் இறக்கியது ஏன்? - ரோகித் சர்மா விளக்கம்
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று வங்காளதேசத்தை எதிர்கொண்ட இந்தியாவின் ஆட்டத்தில், கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் களத்தில் இறக்கியது ஏன்? என்ற கேள்விக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.
வங்காள தேசத்தை வீழ்த்திய இந்தியா மாபெரும் வெற்றி
நேற்று அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. இப்போட்டியின் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
பரபரப்பான கடைசி ஓவர்
நேற்று நடைபெற்ற இப்போட்டியின் கடைசி ஓவர் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் அந்த ஓவரை அனுபவ வீரர் ஷமி வீசப்போகிறாரா அல்லது அர்ஷ்தீப் சிங் வீசப்போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
உடனே, ரோகித் சர்மா அர்ஷ்தீப்பை பந்து வீச அனுப்பினார். அப்போது அர்ஷ்தீப்பின் பந்து வீச்சுக்கு வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் வங்காளதேச அணி 15 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.
ரோகித் ஷர்மா பேட்டி
இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில் -
ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.
ஒரு இளம் வீரர் இதனை செய்வது மிகவும் கடினமான விஷயம். ஆனால் கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிங் இதனை சிறப்பாக செய்து வருகிறார். அதனால் தான் முகமது ஷமியா? அர்ஷ்தீப்பா? என்ற தேர்வில் அர்ஷ்தீப்பை தேர்வு செய்தோம். இனியும் தொடர்ந்து அவர் இதை செய்வார் என்றார்.