வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி - புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை...!
டி20 உலகக் கோப்பை போட்டியில், வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளதையடுத்து, புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
வங்காள தேசத்தை வீழ்த்திய இந்தியா மாபெரும் வெற்றி
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது.
இந்தியா வெற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளதால், இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது.
இப்போட்டியின் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
முதலிடம் பிடித்த இந்தியா
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் பி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
மேலும், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. தற்போது இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் சமூகவலைத்தளங்களில் இந்திய அணிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.