இனி... T20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் விளையாடுவதில் சந்தேகம்..? வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்

Cricket Indian Cricket Team T20 World Cup 2022
By Nandhini Oct 31, 2022 04:06 PM GMT
Report

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

சமீபத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

கடந்த 27ம் தேதி சிட்னியில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய தீர்மானித்தது. இப்போட்டியின் இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்ததால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

t20-world-cup-2022-cricket-india-team

தினேஷ் கார்த்திக் முதுகில் காயம்

நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இப்போட்டியின்போது இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் முதுகில் காயம் ஏற்பட்டது.

அப்போது, தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதிப்பட்டார். உடனடியாக பிசியோ வந்து அவரை பரிசோதித்தார். முடிவில் மைதானத்திலிருந்து தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.

விளையாடுவது சந்தேகம்?

இந்நிலையில், வரும் நவம்பர் 2ம் தேதி அடிலெய்டில் வங்கதேச அணியுடன் இந்திய அணி நேருக்கு நேர் மோத உள்ளது. இதில் விளையாட 72 மணிநேரம் மட்டுமே இருப்பதால் அதற்குள் உடல்தகுதி பெற்றால் மட்டுமே தினேஷ் கார்த்திக் விளையாடுவார். இல்லையெனில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.