Wow... T20 உலக கோப்பை போட்டி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா...! - குவியும் வாழ்த்துக்கள்
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி தர வரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
T20 உலக கோப்பை போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
ரத்தாகும் போட்டிகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு சில போட்டிகள் மழையால் ரத்தாகி வருகிறது. மழை காரணமாக ரத்தாகும் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படுகிறது.
இப்படி வழங்கப்படும் புள்ளிகள் அணிகளுக்கிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான புள்ளிப்பட்டியல் சிக்கலில் இருக்கிறது.
வெளியான புள்ளிப்பட்டியல்
டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
குரூப் 2 பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கிறது.
குரூப் 2 பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், சமூகவலைத்தளங்களில் இந்திய அணிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.