20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்

Cricket India T20 World Cup 2022
By Nandhini Oct 06, 2022 04:51 AM GMT
Report

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

t20-world-cup-2022-cricket-india-team

ஆஸ்திரேலியா பயணம்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி இன்று மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

வரும் 13ம் தேதி வரை, பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. முன்னணி வேகப்பந்து வீச்சாலர் பும்ரா காயம் காரணமாக விலகி இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணி இன்னும் மாற்று வீரரை அறிவிக்கவில்லை. அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.