ஐசிசி வெளியிட்ட சிறந்த பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியல் - முதலிடம் பிடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை...!
ஐசிசி வெளியிட்ட சிறந்த பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
முதலிடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் -
இந்நிலையில் ஐசிசி இன்று டி20 சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் (863 புள்ளிகள்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானை (842 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி தற்போது சூர்யகுமார் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இதோ ஐசிசி வெளியிட்ட டி20 பேட்டிங் தரவரிசை -
1. சூர்யகுமார் யாதவ் - 863 புள்ளிகள்
2. முகமது ரிஸ்வான் - 842 புள்ளிகள்
3. டெவோன் கான்வே - 792 புள்ளிகள்
4. பாபர் ஆசம் - 780 புள்ளிகள்
5. ஐடன் மார்க்ரம் - 767 புள்ளிகள்
6. டேவிட் மாலன் - 743 புள்ளிகள்
7. க்ளென் பிலிப்ஸ் - 703 புள்ளிகள்
8. ரெய்லி ரூஸோ- 689 புள்ளிகள்
9. ஆரோன் பின்ச் - 687 புள்ளிகள்
10. விராட் கோலி - 638 புள்ளிகள்