டி20 உலகக் கோப்பை போட்டி; இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது - ஐ.சி.சி. தகவல்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக ஐ.சி.சி. தகவல் தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் முதல் போட்டி
அடுத்த மாதம் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்தியா நேருக்கு நேர் மோத உள்ளது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் -
ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், இந்த உலகக் கோப்பை தவிர்க்க முடியாத நிகழ்வாக அமைகிறது. இன்னும் சில டிக்கெட்டுகள் உள்ளன. எனவே ரசிகர்கள் தங்களுடைய டிக்கெட்டை பாதுகாப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Over 500,000 tickets sold and still counting ?
— T20 World Cup (@T20WorldCup) September 15, 2022
Get ready for the BIG TIME ?#T20WorldCup https://t.co/NRBGNCJbwK