இந்திய அணி தோல்வி எதிரொலி - டுவிட்டரில் ட்ரெண்டாகும் தோனி... - ரசிகர்கள் தெறிக்க விடும் புகைப்படம்...!
இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தோல்வி எதிரொலியாக டுவிட்டர் தோனி ட்ரெண்டாகி வருகிறார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து, பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது.
இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதனையடுத்து, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
டுவிட்டரில் ட்ரெண்டிங்
இந்நிலையில், உலகக் கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி எதிரொலியாக டுவிட்டரில் தோனி குறித்த பதிவு ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
அந்த பதிவில், ‘ஒவ்வொரு முறையும் எங்கள் அணி சக்கை போடு போடும் போது அந்த மனிதர் நம் மனதில் வருவார்’ என்று ரசிகர்கள் பதிவிட்டு வைரலாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
The man always comes in our mind when our team sucks every time. #T20WorldCup#chokers #Dhoni #INDvsENG #MSDhoni? pic.twitter.com/JmSAuAwiLF
— traped?? (@Ankit20318) November 10, 2022