T20 உலகக் கோப்பை - இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து அணி...!
இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.
இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
டி20 உலகக்கோப்பையில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. இதனையடுத்து, அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதன் பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் 5 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து, பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரை சதம் கடந்தார். இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதனையடுத்து, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
Alex Hales put on a show in Adelaide ?
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2022
For his fiery 47-ball 86*, he is the @aramco POTM ? pic.twitter.com/AUHedX3uvk
The highest partnership in #T20WorldCup history inspires England to a stunning win over India in the semi-finals in Adelaide ?#INDvENG | ?: https://t.co/HlaLdf632a pic.twitter.com/B9smQSPWx3
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2022