வெற்றி மகிழ்ச்சியில் மைதானத்தில் நடனமாடிய அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் வீடியோ

India Indian Cricket Team T20 World Cup 2022
By Nandhini Nov 02, 2022 01:39 PM GMT
Report

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

வங்காள தேசத்தை வீழ்த்திய இந்தியா மாபெரும் வெற்றி

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது.

இந்தியா வெற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளதால், இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. இப்போட்டியின் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது

t20-world-cup-2022-cricket-india-arshdeep-singh

நடனமாடிய அர்ஷ்தீப் சிங் 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெற்றி மகிழ்ச்சியில் ரசிகர்களை நோக்கி வந்த அர்ஷ்தீப் சிங்  மைதானத்தில் நடனமாடினார். இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் குஷியில் துள்ளி குதித்தனர். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.