கிரிக்கெட் வீரர்களை அதகளப்படுத்திய நகைச்சுவை நடிகர்... - வைரலாகும் Funny Video..!
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் கிரிக்கெட் வீரர்களை நகைச்சுவை நடிகர் கேள்வி கேட்டு அதகளப்படுத்தியுள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
வைரலாகும் Funny Video
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஐசிசிக்கான விளம்பர வீடியோவில், நகைச்சுவை நடிகர் டானிஷ் சைட், ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர்களை ‘வினாடி வினா’ செய்து அதகளப்படுத்தியுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகிறார்கள்.
This is just too good from @DanishSait. pic.twitter.com/EyVkTq3jNp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 18, 2022