2-வதாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து பெற்ற பரிசுத் தொகை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ...
2-வதாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.
2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து
நேற்று மெல்போர்னில் T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இப்போட்டியின் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
பரிசுத் தொகை எத்தனை கோடி தெரியுமா?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதற்கு சமூகவலைத்தளங்களில் உலக நாட்டு மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலர் இங்கிலாந்து அணிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக ரூ.13.84 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரை இறுதியில் தோல்வி அடைந்த மற்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.