டி20 உலகக்கோப்பை : இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து.. - ரசிகர்கள் கொண்டாட்டம்

Sri Lanka Cricket England Cricket Team T20 World Cup 2022
By Nandhini Nov 05, 2022 01:01 PM GMT
Report

டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் இங்கிலாந்து நுழைந்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

வெளியேறுகிறது இலங்கை

நேற்று நடைபெற்ற T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், இலங்கைக்கு இருந்த கடைசி வாய்ப்பு தகர்ந்துள்ளது.

இதனால், அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறுகிறது. இலங்கை T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறுவதால், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

t20-world-cup-2022-cricket-england-srilanka

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

இன்று சிட்னியில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்யில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களத்தில் இறங்கி விளையாடியது.

இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றிலிருந்து வெளியேறியது. T20 உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.