T20 உலக கோப்பை - இன்று இந்திய - வங்காளதேச அணி நேருக்கு நேர் மோதல் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!
T20 உலக கோப்பை போட்டியில், இன்று இந்திய - வங்காளதேச அணி நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
சமீபத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.
நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா
கடந்த 27ம் தேதி சிட்னியில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்ததால் இந்தியா அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி
கடந்த 30ம் தேதி நடைபெற்ற உலக கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இந்தியா - வங்காளதேசம் நேருக்கு நேர் மோதல்
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதுகிறது.
இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அடிலெய்டில் மைதானத்தில் நேற்று மழை பெய்ததால் இந்திய வீரர்கள் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.
இன்றைய வானிலையை பொறுத்தவரை, மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வெற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளதால், இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.