எங்கள் தவறுகளை உணர்ந்து இனி சிறப்பாக செயல்படுவோம்... - பாக். கேப்டன் பாபர் அசாம் வேதனை...!
எங்கள் தவறுகளை உணர்ந்து இனி சிறப்பாக செயல்படுவோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே
நேற்று T20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் நேருக்கு நேர் மோதியது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்திருந்தது.
இதற்கு பின் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. T20 உலகக் கோப்பையில் 2வது போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் வேதனை
பாகிஸ்தான் அணி தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பேசுகையில் -
பேட்டிங் போது நாங்கள் முதல் 6 ஓவர்கள் மிக மோசமான நிலையில் இருந்தோம், ஆனால் ஷதாப் மற்றும் ஷான் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷதாப் அவுட்டானார்.
பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. இதனால், மற்ற வீரர்களுக்கு பேட்டிங்கில் மிகவும் அழுத்தம் ஏற்பட்டது. பவுலிங் போது முதல் 6 ஓவர்களில் நாங்கள் புதிய பந்தை நன்றாகப் பயன்படுத்தவே இல்லை.
இதன் பிறகு, நன்றாக செயல்பட்டோம். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் மிகவும் வலுவான நிலைக்குத் திரும்பி வருவோம் என்றார்.