T20 உலகக் கோப்பை தொடர் - நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் ஷாக்
T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இத்தகவலால் அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று குரூப்1-ல் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் 14.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. இதன் பின் களமிறங்கிய ரஷீத் கான் ஆட்டத்தின் போக்கை மாற்றும் விதமாக அடுத்தடுத்து சில சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால், இப்போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரஷீத் கான் 23 பந்துகளில் 48 ரன்கள் குவித்து இறுதிவரை போராடியும் பயனில்லாமல் போனது.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்
நேற்று நடைபெற்ற T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், இலங்கைக்கு இருந்த கடைசி வாய்ப்பு தகர்ந்தது. இதனையடுத்து, அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறுகிறது.
இந்நிலையில், இலங்கையைத் தொடர்ந்து, நடப்பு சாம்பியன்கள் 2022, டி20 உலகக் கோப்பையிலிருந்து தங்கள் சொந்த மைதானத்தில் நாக் அவுட் செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 1ல் இருந்து அரையிறுதியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியுடன் இணைந்ததால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இப்போட்டியிலிருந்து வெளியேறியது.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ள தகவல் வெளியாகி அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Defending champions #Australia are knocked out of the tournament as #England joined #NewZealand in the semifinals from Group 1.#T20WorldCup pic.twitter.com/nqjrPFE5Z3
— Circle of Cricket (@circleofcricket) November 5, 2022
The defending champions are knocked out of the T20 World Cup 2022 at their own turf ???#crickettwitter #australia #t20worldcup pic.twitter.com/SmM7BE8gWn
— Sportskeeda (@Sportskeeda) November 5, 2022