Wow... T20 உலகக்கோப்பை போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி...!
இன்று நடைபெற்ற T20 உலகக்கோப்பை போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரமாக வெற்றி பெற்றது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியின் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களே எடுத்தது. இதனையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இப்போட்டியில் 3வது வரிசையில் களமிறங்கிய டி சில்வா நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.
இப்போட்டியின் இறுதியில், இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
Sri Lanka wins at The Gabba!#T20WorldCup pic.twitter.com/6Epa7IaNKd
— Robbie Thornton (@RobbieThornton) November 1, 2022