T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இலங்கை - ஐக்கிய அரபு அமீரகம் இன்று நேருக்கு நேர் மோதல்
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை - ஐக்கிய அரபு அமீரகம் இன்று நேருக்கு நேர் மோத உள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இலங்கை தோல்வி
கடந்த 16ம் தேதி டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை - நமிபியா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியின் இறுதியில், 19 ஓவர்கள் முடிவில் நமிபியா 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய சாம்பியனான இலங்கையை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.
இலங்கை - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதல்
இந்நிலையில், T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை-ஐக்கிய அரபு அமீரக அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளன. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நமிபியாவிடம் தோல்வி அடைந்தது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரக அணி, நெதர்லாந்திடம் பணிந்தது. அடுத்த சுற்றில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயத்தில் இரு அணிகளும் கடுமையாக போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.