டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகைன்னு தெரியுமா? ஐசிசி அறிவிப்பு

Cricket T20 World Cup 2022
By Nandhini Sep 30, 2022 09:59 AM GMT
Report

டி20 உலகக்கோப்பை போட்டியில், கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

t20-world-cup-2022-cricket

பரிசுத்தொகை

இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை ஐ.சி.சி. தற்போது அறிவித்திருக்கிறது.

சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர்களும், சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் வழங்கப்படம். இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் ரூ. 45,67,17,240) என்று ஐசிசி தெரிவித்திருக்கிறது.