T20 உலக கோப்பை போட்டி - ஆஸ்திரேலிய வீரர் இங்லிஸ் விலகல் - ஷாக்கான ரசிகர்கள்...!

Cricket T20 World Cup 2022 Australia Cricket Team
By Nandhini Oct 21, 2022 08:25 AM GMT
Report

T20 உலக கோப்பை போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் இங்லிஸ் விலகியுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

t20-world-cup-2022-australia-josh-inglis

ஆஸ்திரேலிய வீரர் இங்லிஸ் விலகல்

இந்நிலையில், T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த மாற்று விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் கோல்ப் விளையாடிய போது ஸ்டிக்கின் கைப்பிடி பகுதி உடைந்து அவரது வலது கையில் குத்தியதில் காயமடைந்தார்.

இதனையடுத்து, அவர் உலக கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பேட்டிங் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.  ஜோஷ் இங்லிஸ் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.