டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - யார் யாருக்கு இடம்?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.