''எகுறு அல்லு சில்லு எட்டி செதறனும் '' 6.3 ஓவரில் இந்தியா அபார வெற்றி

t20worldcup INDvSCO 10wickets
By Irumporai Nov 05, 2021 04:36 PM GMT
Report

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில், இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்நிலையில், துபாய் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

இந்த உலகக்கோப்பை தொடரில், முதல் இரண்டு போட்டிகளை இழந்திருந்த இந்திய அணி, கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று, இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது.

இந்த போட்டியிலும் இனி வரும் போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணிக்கு, இன்றைய வெற்றி, அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்து கொள்வதற்கான நம்பிக்கையை தருகிறது

7.1 ஓவர்களுக்குள் போட்டியை முடித்தால், 2 புள்ளிகள் கிடைப்பதோடு ரன் ரேட்டிலும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்து ராகுல் - ரோஹித் இணை.வெறும் 4 ஓவர்களில் 2 சிக்சர்கள்,8 பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட இந்த இணை, நடப்பு உலகக்கோப்பையின் அதிவேக 50 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது

இந்தியா. மேலும், 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது இந்திய அணி.