டி20 உலகக்கோப்பையை வென்றால் ரூ.12 கோடி பரிசு - ஐசிசி அதிரடி அறிவிப்பு

T20 World Cup 2021 12 crore prize
By Thahir Oct 10, 2021 01:22 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பையை வென்றால்  ரூ.12 கோடி பரிசு - ஐசிசி அதிரடி அறிவிப்பு | T20 World Cup 2021 12 Crore Prize

அதன் படி, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 கோடி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ.3 கோடி கொடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக, டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரூ.42 கோடி ஒதுக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும், 2016 போல் சூப்பர் 12 சுற்றில் வெற்றிப்பெறும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

சூப்பர் 12 சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவிருக்கிறது, இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப்பெறும் அணிக்கு ரூ.30 லட்சம் கொடுக்கப்படும்.

இதற்கு மொத்தம் ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் 12 சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ. 52.59 லட்சம் வழங்கப்படும், இதற்கு மொத்தம் ரூ. 4.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரவுண்ட் 1 சுற்றில் மொத்தம் 12 போட்டிகளில் நடைபெறவிருக்கிறது, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப்பெறும் அணிக்கு ரூ.30 லட்சம் கொடுக்கப்படும்.

இதற்கு மொத்தம் ரூ.3.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரவுண்ட் 1 சுற்றில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும், இதற்கு மொத்தம் ரூ. 1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது.

வங்க தேசம், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை ஆகிய எட்டு அணிகள் 'ரவுண்ட் 1' சுற்றில் பங்கேற்கின்றன.