டி.20 உலகக் கோப்பையை வெல்வது இவர் கையில் தான் உள்ளது கோலி கையில் இல்லை - முன்னாள் வீரர்
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூரின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் வீரர் மாண்டி பன்சர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவாக இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இதில் தற்போது க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்று அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ளது.
இந்த சுற்றில் தான் இந்தியா பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் மோத உள்ளன. பரபரப்பான போட்டிகள் துவங்க உள்ளதால் இந்த தொடரில் எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்,
எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்தான தங்களது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இங்கிலாந்து வீரரான மாண்டி பன்சர்,
இந்திய அணியின் வெற்றியில் ஷர்துல் தாகூரின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாண்டி பன்சர் பேசுகையில், 'விராட் கோலியின் துருப்பு சீட்டு ஷர்துல் தாகூராக தான் இருப்பார். ஷர்துல் தாகூர் இந்த தொடரில் பல பேட்ஸ்மேன்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுப்பார், அதே போல் பேட்டிங்கில் பல அணிகளுக்கு சர்பரைஸ் கொடுப்பார்.
விராட் கோலி இந்த தொடரில் ஷர்துல் தாகூரை சரியாக பயன்படுத்துவார் என நம்புகிறேன். இந்திய அணியின் வெற்றியில் ஷர்துல் தாகூரின் பங்கு தான் மிக முக்கியமானதாக இருக்கும் என 100 சதவீதம் முழுமையாக நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய மாண்டி பன்சர், 'ஷர்துல் தாகூர் மேட்ச் வின்னராக இருப்பார் என்று கருதியே அவர் டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கபப்ட்டுள்ளார்.
எதிரணிகள் அவரை அசால்டாக நினைத்துவிட கூடாது, இந்திய அணிக்கு கிடைத்துள்ள அடுத்த மனோஜ் பிரபாகர் ஷர்துல் தாகூர் தான்.
அதே போல் இந்திய அணியின் பென் ஸ்டோக்ஸ், ஷர்துல் தாகூர் தான். அவர் நிச்சயமாக மேட்ச் வின்னராக இருப்பார், பல அணிகளுக்கும் பல வீரர்களுக்கும் இந்த தொடரில் செம சர்பரைஸ் கொடுப்பார்' என்று தெரிவித்துள்ளார் மாண்டி பன்சர்.

CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
