டி20 உலக கோப்பை போட்டியில் இவர் தான் கேப்டன் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக உள்ளார்.
கேப்டன் விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை பெற்றாலும், ஐசிசி தொடரை ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது குறையாகவே உள்ளது.
இதனிடையே, டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறினார்.
இதனிடையே அடுத்த மாதம் தொடங்கு டி20 உலக கோப்பை தொடருக்கு பின், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.
இதையடுத்து, டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முன்னாள் வீரர்களும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, டி20 உலக கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த வேண்டும்.
அடுத்த ஆண்டும் டி20 உலக கோப்பை நடக்க உள்ளதால் அடிக்கடி கேப்டன் மாற்றுவது தேவையற்றது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.