கண்டிப்பா இந்தியா – நியூசிலாந்து டி.20 தொடரில் இந்த அணி தான் வெல்லும்; ஹர்பஜன் சிங்
இந்தியா நியூசிலாந்து இடையேயான டி.20 தொடரில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற இருந்தது.
இந்தியாவில் இந்த தொடர் நடைபெற இருந்ததால் இந்திய அணி கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற 50ஓவர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை அசால்டாக வெல்லும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படாததால் இந்தியாவில் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை தொடர், துபாய்க்கு மாற்றப்பட்டது.
அதோடு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் கையை விட்டு சென்றது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வியை சந்தித்த இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதிபெற முடியாமல் வெளியேறியது.
சமகால கிரிக்கெட் உலகின் வல்லரசாக கருதப்படும் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியதை முன்னாள் வீரர்கள் பலர் இன்றுவரையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதே போல் அடுத்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி செய்ய வேண்டிய மற்றும் திருத்தி கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்தான தங்களது கருத்துக்களையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், இந்தியா நியூசிலாந்து இடையேயான டி.20 தொடரை எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என நம்புகிறேன்.
இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்க வேண்டும். இஷான் கிஷன் திறமையான வீரர்.
அடுத்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இஷான் கிஷன் இருப்பார் என நம்புகிறேன்.
மூன்றாவது இடத்தில் களமிறங்க அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், முடிந்த அளவிற்கு இஷான் கிஷனிற்கு இந்திய அணி அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.